நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பாத தமிழக ஆளுநர் வெளியேறக்கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கைது

சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பாததை கண்டித்தும், தமிழக அரசின் 11 மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தை விட்டு வெளியேற கோரியும் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பு சார்பில் நேற்று கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.இதனால் கவர்னர் மாளிகை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் திட்டமிட்டபடி புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட துணை செயலாளர் குமரன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் சீராளன் உள்பட 50க்கும் மேற்பட்டோர் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஒன்று கூடினர்.ஆளுநருக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியபடி பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். அவர்களில் 15 பேர் கவர்னர் மாளிகையை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மாலையில்  விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பாத தமிழக ஆளுநர் வெளியேறக்கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: புரட்சிகர இளைஞர் முன்னணியினர் கைது appeared first on Dinakaran.

Related Stories: