நிலக்கோட்டை, ஜூன் 23: நிலக்கோட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (45). ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய செந்தில்குமார் குடும்பத்தை சரிவர கவனிக்க முடியவில்லை என உறவினர்கள், நண்பர்களிடம் கூறி அடிக்கடி புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமார் திடீரென வீட்டிலிருந்து வெளியேறி
அருகிலுள்ள ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த நிலக்கோட்டை தீயணைப்பு துறையினர், போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து எஸ்ஐ அபினேஷ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post நிலக்கோட்டை அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.
