விருதுநகர், ஜூலை 19: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 21ம் தேதி முதல் துவங்க உள்ளது. விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட தகவல் வருமாறு: மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் டிஎன்பிஎஸ்சி, டிஎன்யுஎஸ்ஆர்பி, டிஆர்பி போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏக்கான அறிவிப்பு ஜூலை 15ல் வெளியிடப்பட்டது. முதல்நிலைத்தேர்வு செப்.28ல் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு மற்றும் 20 இலவச பாடவாரியான தேர்வு மற்றும் முழுமாதிரி தேர்வுகள் ஜூலை 21 முதல் நடைபெற உள்ளது.
தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம். டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
The post நாளை மறுநாள் துவக்கம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.
