நாமக்கல் அருகே ஆசிரியை கண்டித்ததால் 11-ம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆசிரியை கண்டித்ததால் ரயில் தண்டவாளத்தில் படுத்து 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கட்டுமான தொழிலாளியான பழனிச்சாமி. இவரது மகன் ரிதுன், அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலை 12 மணியளவில் மாணவன் ரிதுனை பள்ளி ஆசிரியை திட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்து உள்ளார். இதில் மனமுடைந்த மாணவன் பள்ளிக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஈரோடு ரயில்வே போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையே தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு டிஎஸ்பி மற்றும் வெப்படை போலீசார், கிராம மக்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க போவதில்லை எனக் கூறி தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

The post நாமக்கல் அருகே ஆசிரியை கண்டித்ததால் 11-ம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: