நாமக்கல்லில் ₹50 கோடியில் ஆவின் பால் பண்ணை

நாமக்கல், ஏப்.6: நாமக்கல்லில் ₹50 கோடியில் ஆவின் பால்பண்ணை அமைக்கப்படும் என்ற அமைச்சரின் அறிவுப்புக்கு, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி.,நன்றி தெரிவித்துள்ளார்.சேலம் ஆவினில் இருந்து, நாமக்கல் ஆவின் (நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம்) பிரிக்கப்பட்டு தனியாக செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஆவினுக்கு 16,500 விவசாயிகள் தினமும் பால் ஊற்றுகிறார்கள். தினமும் 1.12 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடம் இருந்து ஆவின் கொள்முதல் செய்கிறது. நாமக்கல் ஆவின் மூலம், நவீன பால் பண்ணை அமைக்கப்படும் என, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது, பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்தார். நாமக்கல் நவீன ஆவின் பால் பண்ணைக்காக, மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் அமைச்சகம் ₹6.89 கோடி முழு மானியமாக அளித்துள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி.,யின் வேண்டுகோளை ஏற்று, ஒன்றிய அரசு இந்த மானியத்தை அளித்துள்ளது.

இந்நிலையில், நேற்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற பால் வளத்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய பால் வளத்துறை அமைச்சர் நாசர், ‘தினமும் 2 லட்சம் லிட்டம் பாலை பதப்படுத்தும் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் மையம் ₹50 கோடியில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை நிறைவேற்றும் வகையில், இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் அமைச்சகம் ₹6.89 கோடி மானியமாக அளித்துள்ளது. இதையடுத்து ஆவின் பால் பண்ணை அமைக்கும் பணி, நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் துவங்கியுள்ளது,’ என்றார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி., நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில், தேர்வு செய்யப்பட்ட 11 ஏக்கரில் ஆவின் நவீன பால் பண்ணை அமைக்கும் பணி, விரைவில் துவங்கப்படும். இதன் மூலம் இம்மாவட்ட விவசாயிகள் மட்டும் இன்றி பொதுமக்களும் பயனடைவார்கள். பால் உபபொருட்களும் இந்த நவீன பால் பண்ணையில் தயாரிக்கப்படும்,’ என்றார்.

திமுகவில் ஒரு லட்சம் புதிய

உறுப்பினர்களை சேர்க்க இலக்குபள்ளிபாளையம், ஏப்.6: குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில், திமுகவில் ஒரு லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து பள்ளிபாளையம் நகரம், குமாரபாளையம் நகரம், பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலாம்பாளையம், படைவீடு ஆகிய பேரூராட்சி பகுதிகளில், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் படிவங்களை, கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினர். பள்ளிபாளையம் ஒன்றிய திமுக செயலாளர் வெப்படை செல்வராஜ், நகர செயலாளர் குமார், குமாரபாளையம் செல்வம், ஆலாம்பாளையம் கார்த்திராஜ், படைவீடு ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சிகளில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பாரதி நகர் அதிமுக கிளை செயலாளர் அப்துல்அலிசேட், பாப்பம்பாளையம் அதிமுக கிளை செயலாளர் சரண்ராஜ் மாவட்ட பிரதிநிதி சம்சாத் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி, நேற்று திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு திமுக துண்டு அணிவிக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

The post நாமக்கல்லில் ₹50 கோடியில் ஆவின் பால் பண்ணை appeared first on Dinakaran.

Related Stories: