திருச்செங்கோடு, ஆக.23: திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு நகர் பகுதியில் செயல்படும் உணவகங்கள், தேநீர் கடைகள், தொழில் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், இதர தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதி 2023ன் படி நகராட்சியில் உரிய தொழில் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறாமல் தொழில் நடத்தி வரும் நிறுவனங்கள், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் நேரடி தள ஆய்வில் கண்டறியப்பட்டால், எவ்வித முன் அறிவிப்பு இன்றி மூடி முத்திரையிடப்பட்டு உரிய அபராத கட்டணத்துடன் உரிமம் வசூலிக்கப்படும். இவ்வாறு நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
The post தொழில் நிறுவனங்கள் உரிமம் பெற்று செயல்பட வேண்டும் appeared first on Dinakaran.