காரைக்கால், ஜூன் 27: காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழிற்நுட்ப கழகம் புதுச்சேரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தலின் பெயரிலும், கழகத்தின் இயக்குனர் மகரந்த் மாதவ் காங்ரேகர் அறிவுறுத்தலின் பெயரிலும் யோகா தினம் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் நிர்வாக வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரியில் மாணவர் செயல்பாடு மற்றும் விளையாட்டு உதவியாளராக பணிபுரியும் கரண் கௌதம் யோக தோரணைகள், பிராணாயாமம் மற்றும் தியான நுட்பங்கள் போன்றவற்றை பங்கேற்பாளர்களுக்கு பயிற்றுவித்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
The post தேசிய தொழில்நுட்பகழகத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.
