தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி, மே 15: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம், தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நாளை (16ம் தேதி) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே மாநில அணி துணை செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: