(தி.மலை) சித்திரை மாத அமாவாசையொட்டி ஊஞ்சல் உற்சவ விழாதிரளான பக்தர்கள் பங்கேற்புவடவெட்டி அங்காள பரமேஸ்வரி கோயிலில்

சேத்துப்பட்டு, ஏப்.20: வடவெட்டி அங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்திரை மாத அமாவாசையொட்டி ஊஞ்சல் உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டு அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி கோயிலில் நேற்று சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழா நடந்தது. காலை கோபால விநாயகர், பெரியாழி, முத்துமாரியம்மன், நவகிரகங்கள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் மேடையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை அமர்த்தி தாலாட்டு விழா தொடங்கியது. அப்போது அம்மனுக்கு உகந்த பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

The post (தி.மலை) சித்திரை மாத அமாவாசையொட்டி ஊஞ்சல் உற்சவ விழா

திரளான பக்தர்கள் பங்கேற்பு

வடவெட்டி அங்காள பரமேஸ்வரி கோயிலில்
appeared first on Dinakaran.

Related Stories: