பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடைப்பயண ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி  நடைப்பயண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் தொடங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இந்த நடைப்பயண ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது நடத்தப்படும் அடக்குமுறையை நிறுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட காங்கிரஸ் கட்சியினரை கீழ் அம்பி அருகே பாலுசெட்டிசத்திரம் போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் அருள் ராஜ், வட்டார தலைவர்கள் முருகேசன், தங்கராஜ், அசோகன், மாவட்ட துணை செயலாளர் கே.சி.பாபு மற்றும் பத்மநாபன், அருண், கோபால், நாதன், அன்பு உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர்.

Related Stories: