திருவையாறு ஐயாறப்பர் திருமுறை மன்றம் 8ம் ஆண்டு நிறைவு விழா

திருவையாறு, ஏப்11: திருவையாறு ஐயாறப்பர் திருமுறை மன்றம் எட்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஒன்பதாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு ஆடல் வல்லான், நால்வர் உள்ளிட்ட திருமேனிகளுக்குத் திருமஞ்சனம் மற்றும் பேரொளி வழிபாடு நடைபெற்றது. அண்ணாமலை இறை வணக்கம் பாடினார். தஞ்சாவூர் நடராஜன் நரம்பிசை மற்றும் அய்யம்பேட்டை செந்தில்குமார் முழவிசையுடன் காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் தஞ்சாவூர் ராஜா வர்ஷன் தமிழிசை வழங்கினார். திருமுறை மன்றம் சார்பில் ராஜாவர்ஷனுக்கு தமிழிசைத்திலகம் விருது வழங்கப்பட்டது. இதில் திருவையாறு தமிழிசை மன்ற பொருளாளர் இராமஅசோக்குமார், அறங்காவலர் துரை வாசுதேவன் மற்றும் சிவனடியார்கள், திருமுறை மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருமுறை மன்ற தலைவர் நல்லசிவம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post திருவையாறு ஐயாறப்பர் திருமுறை மன்றம் 8ம் ஆண்டு நிறைவு விழா appeared first on Dinakaran.

Related Stories: