மன்னார்குடி, மே. 28: திருவாரூர் மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க மாவட்டகுழு கூட்டம் மணி தலைமையில் மன்னார்குடியில் நேற்று நடந்தது.
ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் ஆசாத், மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வன்ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட துணை செயலாளர் சரவணன், சிபிஐ நகர செயலாளர் கலியபெரு மாள், ஏஐடியுசி நகர தலைவர் தனிக்கொடி ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், மன்னார்குடி, திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டியில் இயங்கும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு தனித்தனி மோட்டார் வாகன ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். மன்னார்குடி வட்டார போக்குவரத்து அலுவகத்தில் டெஸ்ட் டிரைவ் தளம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post திருவாரூர் மாவட்ட ஆட்டோ, போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.
