திருவாரூர், மே 7: திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடியில் இயங்கி வரும் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லுாரி. மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டத்திலேயே கல்வியிலும், விளையாட்டு துறையிலும் சாதனைகளைபடைத்து வரும் கல்லூரியாக விளங்கி வருகிறது. இக்கல்லுாரியில் இம்மாதம் 15ம் தேதி வரை கட்டண சலுகையுடன் பாலிடெக்னிக் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு D.Agri, DMLT, DME, DEEE, DECE, D.Comp, D.Civil போன்ற டிப்ளமோ பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. SC/ST மாணவர்கள் கல்விகட்டணம் செலுத்த தேவையில்லை. இங்கு சேர்க்கை பெறும் அனைத்து மாணவர்களுக்கும் Books மற்றும் கல்லுாரி பேருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
10வது தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டிலும் சேர்க்கை பெறலாம். மயிலாடுதுறை மூவலூரில் இயங்கி வரும் ஏழுமலையான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அன்டு கேட்ரிங் கல்லூரி. அழகப்பா பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பெற்ற இக்கல்லூரியில் மூன்றாண்டு பிஎஸ்சி, டிப்ளமோ மற்றும் தமிழக அரசின் அங்கீாரம் பெற்ற ஓராண்டு கேட்ரிங் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
The post திருவாரூர் கொல்லுமாங்குடியில் ஏழுமலையான் கல்வி நிறுவனங்களில் கட்டண சலுகை appeared first on Dinakaran.
