திருமீயச்சூரில் ஆதார் சிறப்பு முகாம்

மயிலாடுதுறை, ஜூன் 2: மயிலாடுதுறை கோட்டத்தில் பேரளம் அருகில் உள்ள திருமீயச்சூர் கிராமத்தில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வரும் 3, 4 ஆகிய 2 நாட்கள் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் உமாபதி கூறியதாவது,
மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி தலைமை அஞ்சலகங்களிலும் மற்றும் ஆதார் சேவை உள்ள துணை அஞ்சலகங்களிலும் ஆதார் சேவை தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வசதிக்காக ஆதார் சிறப்பு முகாம் பேரளம் திருமீயச்சூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 3(நாளை), 4 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.இந்த முகாமில் பொதுமக்கள் புதிதாக ஆதார்ப்பதிவு, பழைய ஆதார் அட்டையில் பெயர் முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம், கைரேகை புகைப்படம் புதுப்பித்துக்கொள்ளலாம். புதிய ஆதார் பதிவு செய்தால் இலவசமாகவும், பழைய ஆதார் அட்டையில் பெயர் முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50, கைரேகை புகைப்படம் புதுப்பித்தல் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post திருமீயச்சூரில் ஆதார் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: