திருமயம், அரிமளம் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

 

திருமயம், ஏப்.29: திருமயம், அரிமளம் பகுதியில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றிய அதிமுக சார்பில் நச்சாந்துபட்டி, அரிமளம் ஒன்றியம் நமணசமுத்திரம், ராயவரத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.திருமயம் வடக்கு ஒன்றிய செயலாளர் திலகர் முன்னிலையில் நடந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் பழங்கள், நீர்மோர், பானகம் உள்ளிட்ட குளிர் பானங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், சிமெண்ட் பிரிவு செயலாளர் குழந்தைவேலு, ஒன்றிய பொருளாளர் பெரியசாமி, ஒன்றிய அவைத்தலைவர் பொன்னையா, கிளைச் செயலாளர் செங்கீரை சாத்தையா, முன்னாள் கவுன்சிலர்கள் கிருஷ்ணர், ரவிச்சந்திரன், விவசாய பிரிவு நடராஜன், இளைஞரணி சஞ்சய் காந்தி,ஒன்றிய இளைஞர் பாசறை அன்புராஜா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post திருமயம், அரிமளம் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: