திருப்புவனம் கோவில் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருப்புவனம் : திருப்புவனம் அக்ரகாரத்தெருவில் பெருமாள் கோவில், சண்முக நாதர் கோவில்கள் உள்ளன. சிமென்ட் சாலை போடப்பட்டுள்ள இருபக்கமும் கழிவுநீர் கால்வாய் உள்ளது. கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால் கழிவுநீர் சிமென்ட் சாலையில் வழிந்து பெருகி நிற்கிறது. இதனால் பெருமாள் மற்றும் முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கொரோனா முதல் பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புதிய நோய்களை பரப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. கோட்டை மற்றும் தம்பிரான் மடத்தெரு உட்பட பல்வேறு தெருக்களில் கழிவு நீர் வாறுகால் சரிவர அள்ளுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post திருப்புவனம் கோவில் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர் appeared first on Dinakaran.

Related Stories: