திருப்புத்தூரில் ரூ.4.72 கோடி மதிப்பில் யூனியன் அலுவலக கட்டிடம் திறப்பு

திருப்புத்தூர், ஜூலை 30: திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.4.72 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், திட்ட அலுவலர் சிவராமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றினார்.

விழாவில் பேசிய அவர், திட்டங்களை மட்டும் அறிவிக்கின்ற ஆட்சியாக இல்லாமல் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்க்கும் ஆட்சியாக இந்த ஆட்சி விளங்குகின்றது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது என்றார்.

இதில், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி) சத்தியன், (கிராம ஊராட்சி) சோமதாஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பையா, கலைமாமணி, ராமசாமி பழனியப்பன், சுமதி, ஜெயபாரதி, கலைமகள், பாக்கியலெட்சுமி பன்னீர்செல்வம், சகாதேவன், ராமேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சேதுராமன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) ரமேஷ்பிரசாத், உதவிய பொறியாளர்கள் இராமசாமி, வீரப்பன், ராஜ்குமார், மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், திருப்புத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்புத்தூரில் ரூ.4.72 கோடி மதிப்பில் யூனியன் அலுவலக கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: