திருப்பரங்குன்றம், மே 30: திருப்பரங்குன்றம் அருகிலுள்ள ஹார்விபட்டி எஸ்ஆர்வி நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று இரண்டு வயதுடைய புள்ளிமான் ஒன்று திடீரென வந்தது. இந்த மானை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தோஷ கூச்சலிட்டனர். இதனால் அச்சமடைந்த மான் அங்கிருந்து புறப்படுவதற்காக தாவிச்சென்றதில், முட்புதரில் சிக்கிக்கொண்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் மானை மீட்க முயற்சித்தனர்.
அப்போது முயல் பிடிப்பதற்காக யாரோ வைத்திருக்கும் இரும்பு கம்பி வலையில் சிக்கியதால் மானின் கால் மற்றும் வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மானை மிகவும் பாதுகாப்பாக வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மானுக்கு சிகிக்கை தொடர்கிறது. உடல்நிலை தேற்றம் அடைந்த பின் மான் வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் கூறினர்.
The post திருப்பரங்குன்றம் அருகே இரும்பு கம்பியில் சிக்கி புள்ளி மான் காயம்: வனத்துறையினர் மீட்டு சிகிச்சை appeared first on Dinakaran.
