திருச்செந்தூர் கோயிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தற்போது அதிகாலை 5 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் (16ம் தேதி) மார்கழி மாதம் பிறக்கிறது. இதையொட்டி அன்று முதல் வருகிற ஜன.14ம் தேதி வரை (மார்கழி 30 வரை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை ஆகியவை நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், 6.45 மணிக்கு ராக்கால தீபாராதனை நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு ஏகாந்தம், இரவு 8 மணி முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடை, திருக்காப்பிடுதல் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தங்கரதம் புறப்பாடு நடக்கிறது. இவை தவிர ஜன.1 புத்தாண்டு அன்று அதிகாலை 1 மணிக்கும், ஜன.6ம் தேதி திருவாதிரை அன்று அதிகாலை 2 மணிக்கும், 15ம் தேதி தைப் பொங்கலன்று அதிகாலை 1 மணிக்கும் நடை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post திருச்செந்தூர் கோயிலில் நடை திறப்பு நேரம் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: