சிவகாசி , மே 5: விருதுநகர் மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பாக சிவகாசியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு ஆலோசனையின் பேரில் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகில் விருதுநகர் வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் நீர் மோர் பந்தல் நேற்று காலை திறக்கப்பட்டது. விருதுநகர் வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் செல்வராணி தலைமை வகித்தார். கோடை கால வெப்பத்திலிருந்து பொது மக்களை காக்கும் வகையில் நீர் மோர் பந்தலை திமுக மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன், மேயர் சங்கீதா இன்பம் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன. இதில் மாநகர பகதி கழக செயலாளர்கள் காளிராஜன், கருணாநிதிப் பாண்டியன், மாரீஸ்வரன், மாநகராட்சி மண்டல குழுத்தலைவர்கள் குருசாமி, சேவுகன், கவுன்சிலர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விருதுநகர் வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சண்முகராஜன் செய்திருந்தார்.
The post திமுக மருத்துவ அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.
