மானாமதுரை, ஜூலை 6: மானாமதுரையில் ஓரணியில் தமிழ்நாடு எனும் தலைப்பில் திமுக உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. நகர் திமுக சார்பில் மானாமதுரை ஆர்.சி.தெருவில் நடைபெற்ற இந்த உறுப்பினர் சேர்க்கையை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகப்பன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், மாவட்டத் துணைச் செயலர் சேங்கைமாறன், நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, நகரச் செயலர் பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலர்கள் துரை ராஜாமணி, அண்ணாதுரை, முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட
னர்.
The post திமுக உறுப்பினர் சேர்க்கை துவக்கம் appeared first on Dinakaran.
