திமுகவினர் தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர், பிப்.29: திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை, வடக்கு மாவட்ட செயலாளர், செல்வராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், மண்டல தலைவர் கோவிந்தசாமி, பகுதி செயலாளர் மேங்கோ பழனிச்சாமி. மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பகுதி அவைத்தலைவர் தம்பிகுமாரசாமி, வட்ட செயலாளர் பத்திரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் சூர்யா, துரை, ரவிச்சந்திரன், கலைல்செல்வி, ஆனந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பல்லடம், பிப்.29: பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆட்சி சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி தெருமுனை பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். இதில் திமுக கிளை செயலாளர் சரவணன், பூத் கமிட்டி பொறுப்பாளர் துரைசாமி, ஒன்றிய மகளிர் அணி தலைவர் ராணி, கிளை துணை செயலாளர் சித்ரா, மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் வின்செட், ஆறுமுகம், ஆறுக்குட்டி, கிட்டுச்சாமி, விக்னேஷ், சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுகவினர் தெருமுனை பிரச்சாரம் appeared first on Dinakaran.

Related Stories: