திட்டமிட்டபடி 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்; ஓபிஎஸ் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: உள்நோக்கத்துடன் ஓ.பி.எஸ் செயல்பட்டுவருகிறார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு நாளை மறுதினம் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், ஒற்றைத் தலைமை கோரிக்கையால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து எடப்பாடி அணிக்கு மாறுவதால் ஓபிஎஸ் விரக்தி அடைந்துள்ளனர். இதனால் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என ஓபிஎஸ் கடிதம் எழுதுவது வழக்கத்திற்கு மாறாக உள்ளது. கடிதம் எழுதிவிட்டு வேண்டுமென்றே அதை ஊடகங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். ஈபிஎஸ்சிடம் தொலைபேசி மூலம் ஓபிஎஸ் பேசியிருக்கலாம். ஓபிஎஸ் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். அதிமுக பொதுக்குழுவை நடத்துவதற்கு 2000 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அதிமுகவின் அனைத்து மட்டத்திலும் ஒற்றை தலைமை ஏற்கப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை என்பது அதிமுகவில் தொண்டர்கள் தொடங்கி மூத்த தலைவர்கள் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். ஒற்றைத் தலைமை என்பது நல்ல விஷயம் என்பதால் வெளியில் சொன்னேன்; இதில் என்ன தவறு? கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எப்படி சந்திக்கலாம்? கட்சியினர் நீதிமன்றத்துக்கு சென்றால் அவர்களது அடிப்படை உறுப்பினர் பொறுப்பே போய்விடும் என்ற விதி அதிமுகவில் உள்ளது எனவும் கூறினார். …

The post திட்டமிட்டபடி 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்; ஓபிஎஸ் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: