திடக்கழிவுகள் கொட்டும் விவகாரம் மக்கள் வாழ்க்கையுடன் விளையாட முடியாது: உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: திடக்கழிவுகள் கொட்டும் விவகாரத்தில், ‘மக்களின் வாழ்க்கையுடன் விளையாட முடியாது’ என்று ஜம்மு காஷ்மீருக்கு நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திபோராவுக்கு அருகே உள்ள சல்வான் நாசு பகுதியிலும், சல்வான் நல்லா அருகே உள்ள வுல்லார் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் திடக்கழிவுகள் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதை மாசுக்  கட்டுப்பாட்டுக் குழு கண்டறிந்தது. இதற்காக ஜம்மு ஜாஷ்மீர் மாநில மாசு கட்டுப்பாட்டு குழுவால் விதிக்கப்பட்ட ரூ.64.21 லட்சம் இழப்பீட்டை ரத்து செய்ய மறுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் உள்ள முனிசிபல் கவுன்சில் தலைமை நிர்வாக அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘நீங்கள் கையாளும் விதம் இதுதானா? இது உங்கள் மாநிலத்தின் உணர்வுதானா? நீங்கள் மக்களின் உயிருடன் விளையாட முடியாது. அபராதத்தை டெபாசிட் செய்யுங்கள்’ என்று கண்டிப்பு தெரிவித்து உத்தரவிட்டனர். …

The post திடக்கழிவுகள் கொட்டும் விவகாரம் மக்கள் வாழ்க்கையுடன் விளையாட முடியாது: உச்ச நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: