தாலியுடன் வந்து வேட்பாளர் மனு தாக்கல்: ‘குடிமகன்’களுக்கு இன்சூரன்ஸ் வேணுமாம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி வேட்பாளராக, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் கீழராஜகுலராமன் கிராமத்தை சேர்ந்த செல்லப்பாண்டி (53) நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய, கையில், கழுத்தில் தாலியுடன் வந்திருந்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் புஷ்பாவிடம் வேட்புமனு தாக்கல் செய்த பின்பு செல்லப்பாண்டி கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுவினால் கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோர்களை கணக்கெடுத்து மாதந்தோறும் ரூ.5,000 வழங்க வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006ன் கீழ் மதுபான வகைகளை கொண்டு வரவேண்டும். உயிரை பணயம் வைத்து மது குடிக்கிறவர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். நான் வெற்றி பெற்றால் இதற்கான நடவடிக்கைகளில் இறங்குவேன். மதுவினால் பெண்களின் தாலி பறிபோனதை உணர்த்தவே தாலி கயிறுடன் மனு தாக்கல் செய்தேன்’’ என்றார்….

The post தாலியுடன் வந்து வேட்பாளர் மனு தாக்கல்: ‘குடிமகன்’களுக்கு இன்சூரன்ஸ் வேணுமாம் appeared first on Dinakaran.

Related Stories: