தர்மபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அணையை சுற்றியுள்ள 5 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 591 கன அடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டுள்ளதால்  கே.ஈச்சம்பாடி அணையை சுற்றியுள்ள 5 மாவட்டத்திற்கு வெள்ள அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உருவாகி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் ஓசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணைகளில் நீர் நிரம்புகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அருகில் ஒரு சிறிய அணைகட்டு கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்படும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த 3 மாதங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்டது. தற்பொழுது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 768 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 591 கன அடி தண்ணீர்  தென்பெண்ணையாற்றில்  திறக்கப்பட்டதால், கே.ஈச்சம்பாடி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 180 கன அடியிலிருந்து 324 கன அடி தண்ணீர் வருகிறது….

The post தர்மபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அணையை சுற்றியுள்ள 5 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: