தமிழ் வருடபிறப்பு, சித்ரா பவுணர்மி மற்றும் புனித வெள்ளியை தொடர்ந்து சிறப்பு பேருந்துகள்: முன்பதிவு நிறைவு

சென்னை: தொடர் விடுமுறையை அடுத்து சென்னையில் இருந்து செல்லும் 475 அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு நிறைவு அடைந்தது. சென்னையில் இருந்து 1,400 சிறப்பு பேருந்துகள் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன. தொடர் விடுமுறை காரணமாக சென்னை உள்ள மக்கள் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் ஏப்ரல் 16 ஆம் தேதியும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில், கோவை, மதுரை, நெல்லை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலிருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், இன்றும் நாளையும் மக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 1,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கூறியுள்ளது. இதே போல் வரும் ஏப்ரல் 16 ஆம் சித்ரா பவுணர்மி அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று கிரிவலம் செல்வது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், இந்த முறை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கபடுவதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்….

The post தமிழ் வருடபிறப்பு, சித்ரா பவுணர்மி மற்றும் புனித வெள்ளியை தொடர்ந்து சிறப்பு பேருந்துகள்: முன்பதிவு நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: