கரூர், ஏப். 15: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கரூரில் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு நினைத்து முன்னிட்டு கோயில்களின் சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெறுவதுண்டு. இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் பசுபதீஸ்வரர் கோயில், கரூர் மாரியம்மன் கோயில், தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில், கரூர் அபயபிரதான ரெங்கநாதர் கோயில், கரூர் சாய்பாபா கோயில், வெண்ணைமலை ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயில்,நெரூர் சதாசிவம் கோயில் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம், சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. புத்தாண்டு தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
The post தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.