தமிழக கோயில்களில் முடிகாணிக்கைக்கான கட்டண வசூல் இன்று முதல் நிறுத்தம்: காணிக்கை தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய 3 நீதிபதிகள் நியமனம்; வள்ளலார் சர்வதேச மையம்; 10 கல்லூரி திறப்பு

சென்னை: சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:* ஒரு கால பூஜைத்  திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.1000 வழங்கப்படும். * கோயில் பாதுகாப்பிற்கென 10 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். * வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும்.* கடந்த பத்து ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளைக் கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.* சென்னை கொளத்தூர், கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், தென்காசி மாவட்டம் கடையம், திருச்சி மாவட்டம் லால்குடி, திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி  உட்பட தமிழகத்தில் 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ரூ.150  கோடி செலவில் தொடங்கப்படும்.* கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு  செய்யும் முடிகாணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும். இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது….

The post தமிழக கோயில்களில் முடிகாணிக்கைக்கான கட்டண வசூல் இன்று முதல் நிறுத்தம்: காணிக்கை தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய 3 நீதிபதிகள் நியமனம்; வள்ளலார் சர்வதேச மையம்; 10 கல்லூரி திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: