சென்னை தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 812 பேர் பாதிப்பு; 8 பேர் பலி; 927 பேர் குணம்: சுகாதாரத்துறை அறிக்கை..! Nov 12, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ஆரோக்கியம் சென்னை இந்தியா சுகாதார துறை தின மலர் சென்னை: தமிழகத்தில் புதிதாக 812 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.44 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.63 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 812 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 480 பேர் ஆண்கள், 332 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 13ஆயிரத்து 216 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 9ஆயிரத்து 890ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 308 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 8 பேர் உயிரிழந்துள்ளார். 2 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 6 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 259ஆக அதிகரித்துள்ளது. இன்று 927 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 67ஆயிரத்து 67ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. … The post தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 812 பேர் பாதிப்பு; 8 பேர் பலி; 927 பேர் குணம்: சுகாதாரத்துறை அறிக்கை..! appeared first on Dinakaran.
அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே
மறுசீரமைப்பு பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கூடாது: மின்வாரியம் உத்தரவு
கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை 14ம் தேதிக்குள் அகற்றாவிடில் அபராதம் விதிக்க நேரிடும்: பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்: மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையை சந்திக்க சென்னை மாநகராட்சி தயார் தாழ்வான பகுதிகளுக்கு 36 படகுகள் வந்தாச்சு.. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அலாரம் பொருத்தும் பணி தீவிரம்
அண்ணாநகர் கோட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் நிலுவை தொகைகளை செலுத்தி கிரைய பத்திரங்களை பெறலாம்: கலெக்டர் வேண்டுகோள்
மழைக்காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்: சிறப்பு கூட்டத்தில் அறிவுறுத்தல்
மழைக்காலத்தில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணி செய்ய வாட்ஸ்அப் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும்: திருவிக நகர் மண்டல குழு கூட்டத்தில் அறிவிப்பு
தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு