தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருத மொழிகளில் திணிப்பு.. தமிழ் மொழி புறக்கணிப்பு : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா விளாசல்

டெல்லி : தமிழகத்தில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பதற்கு மாநிலங்களவையில் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லாத விவகாரத்தை திமுக உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் எழுப்பினார். இந்த பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் திணிக்கப்படுவதாகவும் சிவா சாடினார். சமஸ்கிருத மொழியில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் தான் 6ம் வகுப்பில் இருந்து 7ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற முடியும் என்பது தமிழக மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்றும் திருச்சி சிவா பேசினார். மாநிலங்களவையில் திருச்சி சிவா பேசியதாவது,’தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் ஆர்.டி.ஐ.மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதே பள்ளியில் இந்தியும் சமஸ்கிருதமும் கட்டாய மொழிகளாக உள்ளன.இந்த இரு மொழிகள் கட்டாயம் எனும்போது, ஏன் தமிழை மொழிப்பாடமாக்க கூடாது ?தரமான கல்வி, குறைந்த கல்வி கட்டணம் என்பதற்காகவே மாணவர்கள் இப்பள்ளிக்கு வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டால் அது ஏழை எளிய தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்றார்மேலும் மத்திய அரசின் இத்தகைய முடிவுகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் திருச்சி சிவா குறிப்பிட்டார். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மொழி பாடங்களின் பட்டியலில் தமிழ் மொழி இணைக்கப்பட வேண்டும் என்றும் சிவா வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, திருச்சி சிவா கோரிக்கையை கல்வித்துறை அமைச்சகம் பரிசீலிக்க பரிந்துரை செய்தார். …

The post தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருத மொழிகளில் திணிப்பு.. தமிழ் மொழி புறக்கணிப்பு : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: