தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம்  செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மாநில அணைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர்கள் செயல்படுவர். மாநில அணைகள் பாதுகாப்பு அமைப்பு தலைமை பொறியாளர், சென்னை, கோவை, மதுரை, திருச்சி மண்டல தலைமை பொறியாளர்கள், தமிழக மின்சார வாரிய தலைமை பொறியாளர், ஒன்றிய மின்சார ஆணைய தலைமை பொறியாளர், ஒன்றிய நிலத்தடி நீர் ஆணைய இயக்குனர், கேரளா தலைமை பொறியாளர் (சோலையாறு, மேல் பவானி அணை),  புதுச்சேரி தலைமை பொறியாளர் (விடூர் அணை), சென்னை ஐஐடி நிறுவன இயக்குனர் (அணைகள் வடிவமைப்பு), திருச்சி என்ஐடி இயக்குனர், அண்ணா பல்கலை நீர்வளத்துறை மைய இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகி்னறனர். அணைகள் பாதுகாப்பு அமைப்பு கண்காணிப்பு பொறியயாளர் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்படுகின்றனர். இந்த குழுவினர் அணையின் பாதுகாப்பு, நீர் வருகை, நீர் வெளியேற்றம் உள்ளிட்டவைகளை கண்காணிக்கும்.தமிழக அரசின் நீர்வளத்துறையில் அணைகள் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த அணைகள் பாதுகாப்பு அமைப்பில் உறுப்பினர்களாக தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் (அணை ஆவண குழு), 4 உதவி செயற்பொறியாளர், 8 உதவி பொறியாளர், செயற்பொறியாளர் (அணை வடிவமைப்பு மற்றும் நீரியல் குழு)  2 உதவி செயற்பொறியாளர், 10 உதவி பொறியாளர்கள், ெசயற்பொறியாளர் (அணை ஹைட்ரோ மெக்கானிக் செல்), 4 உதவி செயற்பொறியாளர், 8 உதவி செயற்பொறியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேட்டூர், பவானிசாகர், வைகை, முல்லை பெரியாறு, பாபநாசம், மணிமுத்தாறு, கிருஷ்ணகிரி, சோலையாறு, திருமூர்த்தி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்பட 90 அணைகள் உள்ளன. இந்த அணைகளை பாதுகாப்பு நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள மாநில பாதுகாப்பு அமைப்பு 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடுகிறது. இந்த கூட்டத்தில், அணைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, அணைகளில் எதுவும் பிரச்னை உள்ளதா என்பது குறித்து இந்த அமைப்பு விவாதிக்கும். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் ஒன்றிய அணைகள் பாதுகாப்பு அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், வருங்காலங்களில் இந்த அணைப்பு மூலம் அணைகளின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஒப்புதல் கூட இந்த அமைப்பு அளிக்கவுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் அணைகள் இயக்ககம் மற்றும் பராமரிப்பு என்ற பிரிவு செயல்படுகிறது. தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் அணைகள் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டு வந்தது. இதுவரை கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் இயங்கி வந்தது. இனி வருங்காலங்களில் அணைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தலைமை பொறியாளர் தனியாக நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் மூலம் இந்த அமைப்பு இயங்கும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  …

The post தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: