தனது இசையை பயன்படுத்த தடை கோரி இசைஞானி இளையராஜா தொடுத்த வழக்கு!: 3 இசை நிறுவனங்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: தனது இசையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக்கோரி 3 நிறுவனங்கள் மீது இளையராஜா தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு வழக்கில் அந்த நிறுவனங்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இளையராஜா இசையில் வெளியான 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு, 3 கன்னடம், 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களில் இசை பணிகளை இன்ரிகோ ரெக்கார்டிங், அகி மியூசிக், யுனிசிஸ் ஆகிய 3 இசை நிறுவனங்கள் பயன்படுத்த தனி நீதிபதி கொண்ட அமர்வு முன்னதாக அனுமதி அளித்திருந்தது. அந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தயாரிப்பாளர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இன்ரிகோ நிறுவனத்திற்கு சாதகமான உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும் பட தயாரிப்பாளர்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளது என்றும் இளையராஜா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து 4 வாரங்களில் பதிலளிக்க இன்ரிகோ ரெக்கார்டிங், அகி மியூசிக், யுனிசிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்செல்வி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.  …

The post தனது இசையை பயன்படுத்த தடை கோரி இசைஞானி இளையராஜா தொடுத்த வழக்கு!: 3 இசை நிறுவனங்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: