டி20 தொடரை வென்றது வங்கதேசம்

மிர்பூர்: நியூசிலாந்து அணியுடன் நடந்த 4வது டி20 போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி 3-1 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 4வது போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசி. 19.3 ஓவரில் 93 ரன்னுக்கு சுருண்டது. வில் யங் 46, கேப்டன் லாதம் 21, பின் ஆலன் 12 ரன் எடுத்தனர். நசும் அகமது, முஸ்டாபிசுர் தலா 4 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்து வென்றது. முகமது நயிம் 29, கேப்டன் மகமதுல்லா 43* ரன் விளாசினர். வங்கதேசம் 3-1 என முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி டி20 நாளை நடக்கிறது.30 ஆயிரம் சோதனைகள்நடப்பு ஐபிஎல் டி20 தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இம்மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளன. ஆரம்பம் முதல் எஞ்சிய 31 ஆட்டங்கள் முடியும் வரை  ஒவ்வொரு 3 நாட்களுக்கு ஒருமுறை  ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்படும். இப்படி  மொத்தம் 30 ஆயிரம் பரிசோதனைகள்  செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.மீண்டும் பட்லர்பிரசவத்தின்போது மனைவியுடன் இருப்பதற்காக இங்கிலாந்து வீரர்  ஜோஸ் பட்லர் விடுமுறையில் சென்றார். அதனால் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், குழந்தை பிறந்ததையடுத்து விடுமுறையை முடித்துக் கொண்டு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மான்செஸ்டரில் நாளை தொடங்க உள்ள 5வது டெஸ்ட்டுக்கான அணியின் துணைக் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். …

The post டி20 தொடரை வென்றது வங்கதேசம் appeared first on Dinakaran.

Related Stories: