சேலம் உள்பட 4 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 53 சதவீதம் பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சேலம்: சேலம் உள்பட 4 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 53 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 24 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போதுவரை 4.69 கோடி பேருக்கு முதல் மற்றும் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் டோஸ் 59 சதவீதம் பேருக்கும், 2வது டோஸ் 19 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. சேலம் சுகாதார மாவட்டத்தில் முதல் டோஸ் 20,92,967 பேருக்கும் மற்றும் 2வது டோஸ் தடுப்பூசி 15,79,404 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 57 சதவீதம் பேருக்கும், 2வது டோஸ் 19 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 8,29,959 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு 6,48,331 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 58 சதவீதம் பேருக்கும், 2வது டோஸ் 20 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் 14,43,967 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு, 11,35,429 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 60 சதவீதம் பேருக்கும், 2வது டோஸ் 18 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 12,57,260 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு 8,45,926 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 54 சதவீதம் பேருக்கும், 2வது டோஸ் 13 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15,77,710 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு 11,67,334 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 58 சதவீதம் பேருக்கும், 2வது டோஸ் 16 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. சேலம், ஆத்தூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய சுகாதார மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் டோஸ் 53 சதவீதம் பேருக்கும், 2வது டோஸ் 17 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்கள் தொகையின் அடிப்படையில் கோவை மாவட்டம் முதல் இடமும், காஞ்சிபுரம் மாவட்டம் 2வது இடமும், நீலகிரி மாவட்டம் 3வது இடமும் பிடித்துள்ளது. அதேபோல், நாமக்கல் மாவட்டம் 14வது இடமும், ஆத்தூர் 19 வது இடமும், கிருஷ்ணகிரி 21வது இடமும், சேலம் 24வது இடமும், தர்மபுரி 29வது இடமும் பிடித்துள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

The post சேலம் உள்பட 4 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 53 சதவீதம் பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: