சேர்வலாறு ஆக்கிரமிப்பு பகுதியில் வசிக்கும் 21 குடும்பங்களுக்கு பட்டா வழங்கல்

 

விகேபுரம்,மே 31: காரையாறு, சேர்வலாறு ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருந்து வரும் காணி அல்லாத 21 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதற்காக முயற்சி எடுத்த களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். காரையாறு மற்றும் சேர்வலாறு ஆக்கிரமிப்பு பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் காணியினம் அல்லாத 21 குடும்பங்களுக்கு அம்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பட்டா வழங்கினார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் உதவியுடன், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா அயராத முயற்சியினால் காரையாறு, சேர்வலாறு ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருந்து வரும் சுமார் 21 குடும்பங்களுக்கு கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தின் மூலம் பயனாளிகள் பட்டா பெற்றனர். இந்நிலையில் பட்டா பெற்றவர்கள் துணை இயக்குனர் இளையராஜாவுக்கும், முண்டந்துறை வனச்சரக அலுவலர் கல்யாணி மற்றும் வனப்பணியாளர்களுக்கு தங்களது நன்றியினைத் தெரிவித்து கொண்டனர்.

The post சேர்வலாறு ஆக்கிரமிப்பு பகுதியில் வசிக்கும் 21 குடும்பங்களுக்கு பட்டா வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: