சேரங்கோடு ஊராட்சியின் மாதாந்திர கூட்டம்

 

பந்தலூர், ஜூலை 19: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் லில்லி எலியாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சஜீத் வரவேற்றார்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்து வாங்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற்று மக்கும் குப்பைகளை கொண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் உரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்வது,

தினந்தோறும் சேரங்கோடு ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது, ஜெஜெஎம் திட்டத்தின் மூலம் குடிநீர் கிணறுகளை தூர்வாரி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது. தெருவிளக்குகள் பராமரிப்பு மற்றும் தமிழ்நாடு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள அய்யன்கொல்லி பகுதியில் உள்ள உழவர் சந்தையை முறையாக செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதித்தனர். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். இறுதியாக துணை தலைவர் சந்திரபோஸ் நன்றி கூறினார்.

The post சேரங்கோடு ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: