தடுப்புசுவர், மயான நடைபாதை பணிகள் தீவிரம்

 

மஞ்சூர், செப்.14: நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் பல்வேறு திட்டங்கள் மூலம் பல்வேறு வார்டுகளிலும் வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறப்பு பகுதி மேம்பாடு திட்டத்தின் மூலம் மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் மற்றும் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் காங்கிரீட் அமைக்கப் பட்டுள்ளது. இதேபோல் மஞ்சூர் மேல்பஜார் பகுதியில் ரூ.9.50 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

இதேபோல் மட்டகண்டி பகுதியில் 15வது நிதி குழு திட்டத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு நடைபாதை மற்றும் தடுப்புசுவர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பேரூராட்சி துணை தலைவர் நேரு மற்றும் மட்டகண்டி வார்டு திமுக கவுன்சிலர் சதீஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து பணிகளை விரைவாகவும், தரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

The post தடுப்புசுவர், மயான நடைபாதை பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: