சென்னையில் நேற்று ஒரே நாளில் 25,632 பேருக்கு தடுப்பூசி: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை:  சென்னை யில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.  அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நேற்று ஒரே நாளில் 25,632 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறிப்பாக கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை 6,774 பேருக்கும், இரண்டாம் தவணை 3,422 பேருக்கும் செலுத்தப்பட்டது. அதைப்போன்று கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை 10,443 பேருக்கும், இரண்டாம் தவணை 4,993 பேருக்கும் செலுத்தப்பட்டது.அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 2,710 பேருக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் 2,490 பேருக்கும், திருவொற்றியூரில் 940 பேருக்கும், மணலியில் 870 பேருக்கும், மாதவரத்தில் 1060 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 1680 பேருக்கும், ராயபுரத்தில் 2710 பேருக்கும், அம்பத்தூரில் 2270 பேருக்கும், தேனாம்பேட்டையில் 880 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 1958 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1370 பேருக்கும், ஆலந்தூரில் 1289 பேருக்கும், அடையாறில் 1795 பேருக்கும், பெருங்குடியில் 1570 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 1340 பேருக்கும் என 15 மண்டலங்களில் 25,632 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது….

The post சென்னையில் நேற்று ஒரே நாளில் 25,632 பேருக்கு தடுப்பூசி: மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: