செங்கோட்டை,நவ.9: செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த நிறுவனம் பிடித்தம் செய்த பிஎப் பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும், மாதம்தோறும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரண்டாவது நாளாக நகராட்சி அலுவலகம் முன்பு சமையல் அடுப்பு, கேஸ் சிலிண்டர், அரிசி, குடிநீர் போன்றவற்றுடன் நகராட்சி முன்பு அந்த இடத்திலேயே மதிய உணவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தில் ஏஐசிசிடியு தூய்மை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன் புதியவன், தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழரசி, முருகேஸ்வரி, குத்தாலிங்கம், மகேஸ்வரி ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை வகித்தனர். தென்காசி மாவட்ட கவுரவ தலைவர் புதியவன், பேச்சிமுத்து, முத்துசாமி, தம்பிதுரை, ராமர் பாண்டியன், உதயகுமார், முத்துலட்சுமி, ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் செங்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் 37 பெண்கள், 20 ஆண்கள் என மொத்தம் 57 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post செங்கோட்டை நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.