செங்கல்பட்டில் ஐடிஐ மாணவர்களுக்கு தொழிற் பழகுநர் மேளா: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், தொழிற் பழகுநர் மேளா நடைப்பெறும் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியருப்பதாவது: செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு 10.4.2023 திங்கள் கிழமை அன்று ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை கொண்டு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா நடத்தப்படுகின்றது. இம்முகாமில், தகுதியுடைய ஐடிஐ தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து ஒன்றிய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், இது தொடர்பான விவரங்களை தெரிந்துக்கொள்ள செங்கல்பட்டில் உள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ சென்று விவரங்கள் அறியலாம். மேலும், dadskillcpt@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 63790 90205 அலைபேசி எண், 044 27426554 என்ற தொலைபேசி எண் ஆகியவற்றில் தொடர்புகொண்டு தொழிற்பழகுநர் முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திகுறிப்பில், ‘செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் சார்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் 11.4.2023 (செவ்வாய்கிழமை) காலை 10 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டிட வளாக கூட்ட அரங்கில் நடைப்பெறும். கலெக்டர் ராகுல்நாத் மற்றும் செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் இச்சிறப்பு மனுநீதி நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்’ என கூறியுள்ளார்.

The post செங்கல்பட்டில் ஐடிஐ மாணவர்களுக்கு தொழிற் பழகுநர் மேளா: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: