சிவகிரி பாரத் பள்ளியில் செஸ் போட்டி பரிசளிப்பு விழா

சிவகிரி,அக்.20: இடைகால் சாம்பியன் செஸ் அகாடமி சார்பில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சதுரங்க போட்டி சிவகிரி பாரத் பள்ளியில் நடந்தது. இதில் சிவகிரி விவேகா பள்ளி, வாசுதேவநல்லூர் தரணி இன்டர்நேஷனல் பள்ளி, தரணி மெட்ரிகுலேஷன் பள்ளி, கண்ணா இன்டர்நேஷனல் பள்ளி, வாசுதேவநல்லூர் அகஸ்தியா பள்ளி, இடைகால் அரசினர் பள்ளி, ஏ.ஆர்.எஸ் மதார் குருகுலம் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றதோடு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் செண்பகவிநாயகம், முருகேசன், விவேகா மெட்ரிக் பள்ளித் தாளாளர் மாரிமுத்து, ஐபிஎம் இந்தியா நிறுவன நடுவர்கள் பிரகாஷ், சிவகணேஷ், மகாராஜன், கமலக்கண்ணன், போக்குவரத்து எஸ்ஐ சேகர், கிராம ஆய்வாளர் சிவராமன், குமரன் குரூப் ஆப் கம்பெனி டாக்டர் ரம்யா, மிரில்லா, தேவி மற்றும் ஒருங்கினைப்பாளர் இசக்கி முத்து செய்திருந்தனர்.

The post சிவகிரி பாரத் பள்ளியில் செஸ் போட்டி பரிசளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: