சிவகாசியில் 27ம் தேதி மின்தடை

 

சிவகாசி, மே 24: மின்வாரிய அதிகாரி பத்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சிவகாசி கோட்டத்தில் பாறைப்பட்டி, சிவகாசி அர்பன், நாரணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற 27ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்படும் பாறைப்பட்டி, விஸ்வநத்தம், பஸ் நிலையம், நாரணாபுரம் ரோடு, ஜக்கம்மாள் கோவில் பகுதி, காரனேசன் காலனி, பழனியாண்டவர்புரம் காலனி, நேரு ரோடு, தந்திதபால் நிலையம் பகுதி, பராசக்திகாலனி, வடக்குரதவீதி, வேலாயுதரஸ்தா, நாரணாபுரம், பள்ளப்பட்டி, லிங்கபுரம் காலனி, ராஜீவ்காந்திநகர், கண்ணாநகர், அம்மன்நகர், காமராஜர்புரம், ஐஸ்வர்யாநகர், அரசன் நகர், பர்மாகாலனி, போஸ்காலனி, முத்துராமலிங்கநகர், இந்திராநகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர். காலனி, மீனாட்சி காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மின்சாரம் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகாசியில் 27ம் தேதி மின்தடை appeared first on Dinakaran.

Related Stories: