சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்த மலையாள இயக்குனர் மாரடைப்பால் மரணம்

சென்னை: மலையாளப் படவுலகில் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்த பிரபல இயக்குனர் அந்தோணி ஈஸ்ட்மேன் (வயது 75), மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழில் 1980ல் வெளியான ‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தில் அறிமுகமானவர், சில்க் ஸ்மிதா. பிறகு அவரை 1981ல் வெளியான ‘இணையை தேடி’ என்ற மலையாளப் படத்தில் இயக்குனர் அந்தோணி ஈஸ்ட்மேன் அறிமுகம் செய்தார். திருச்சூரை சேர்ந்த அவர், ஆரம்பத்தில் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றினார். பிறகு பல திரைப்படங்களை இயக்கி தயாரித்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அந்தோணி ஈஸ்ட்மேன், திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்….

The post சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்த மலையாள இயக்குனர் மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: