நிலக்கோட்டை, ஜூலை 2: சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று நடைபெற்றது, மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலுவலர் இளவரசி முன்னிலை வகித்தார். துப்புரவு மேலாளர் மணிகண்டன் வரவேற்றார் இக்கூட்டத்தில் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி உள்பட அரசு சார்பில் வளர்ச்சி திட்ட பணிகளுக்காக வழங்கப்படும் நிதிகளை அனைத்து வார்டுகளுக்கும் பகிர்ந்தளித்து அடிப்படை பணிகள் அனைத்தும் விரைவில் செய்து தரப்படும் என உறுதி அளித்தார். தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் நியமன உறுப்பினர்களாக நியமித்த தமிழக அரசுக்கும். முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். இதில் கவுன்சிலர்கள் செல்வராஜ், தாமரைச்செல்வி, காமாட்சி, ரவிக்குமார், அமுல்ராஜ், ஹேமலதா, ராஜ், சங்கரேஸ்வரி வேல்விழி மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post சின்னாளபட்டி பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் appeared first on Dinakaran.
