சிவகங்கை, ஜூன் 11: மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் மக்கள் கூடும் பொது இடங்கள், நெருக்கடியான கடைவீதிகள், கரும்புள்ளி பட்டியலில் உள்ள கிராமங்கள் போன்றவற்றை கணக்கில் எடுத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதனால் குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களும் அச்சமடைவர்.
வழிப்பறி, வீடுகளில் கொள்ளை, டூவீலர் திருட்டு, பெட்டிக்கடை உடைப்பு, பொது இடங்களில் குற்ற செயல்கள் போன்றவற்றை தடுத்திட கிராமங்கள், நகரங்கள் என பொதுமக்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் என அனைவரும் அரசோடு ஒன்றிணைந்து சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சிசிடிவி கேமரா அவசியம் appeared first on Dinakaran.
