சிஆர்பிஎப் வீரர்கள் மீது குற்றச்சாட்டு: மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி:  சிஆர்பிஎப் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக விமர்சனம் செய்தது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 6ம் தேதி  மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நூற்றுக்கணக்கான சிஆர்பிஎப் வீரர்கள் வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பெரும்பாலான  வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று முதல்வர் மம்தா  பானர்ஜி பார்வையிட்டார். தொடர்ந்து பேட்டியளித்த முதல்வர் மம்தா பானர்ஜி,  சிஆர்பிஎப் வீரர்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு வரும் வாக்காளர்களுக்கு தொல்லை தந்ததாக தெரிவித்தார். மேலும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து  கொண்டதாகவும், சிஆர்பிஎப் வீரர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இந்நிலையில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது குற்றஞ்சாட்டியது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நேற்று முன்தினம் இரவு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சிஆர்பிஎப் வீரர்களை இழிவுபடுத்தி முதல்வர் மம்தா பேசியது  முற்றிலும் ஆதாரமற்றது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சனிக்கிழமை அதாவது இன்று காலை 11 மணிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் போகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவுமம்தா பானர்ஜி கடந்த மாதம் 10ம் தேதி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். பின்னர் நடந்த பிரசாரத்தின்போது, தன் மீது 5 பேர் கும்பல் தாக்குதல் நடத்தியதாக மம்தா குற்றம்சாட்டினார். இதில், தனது காலில் பலத்த  காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார். இந்த தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் 3 பேர் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்ரமணியம் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது.  அப்போது, ‘இந்த மனுவுக்கு மனுதாரர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்,’ என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்….

The post சிஆர்பிஎப் வீரர்கள் மீது குற்றச்சாட்டு: மம்தாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: