சாலை, சுற்றுச்சுவரை தவிர எந்த கட்டுமான பணிகளும் தொடங்கப்படவில்லை!: மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்தனவா?.. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேச்சால் சர்ச்சை..!!

மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படாத நிலையில் 95 சதவீதம் பணிகள் முடிந்ததாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படாத நிலையில் ஜே.பி. நட்டாவின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். தற்போது 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சாலை, சுற்றுச்சுவரை தவிர எந்த கட்டுமான பணிகளும் தொடங்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உயர்த்தப்பட்ட தொகைக்கு ஒன்றிய அமைச்சரவையில் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில், பாஜகவின் பல்துறை வல்லுநர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பேசுகையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டது. விரைவில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று தெரிவித்திருந்தார். எய்ம்ஸ்-க்கு மொத்தம் ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்கு கூடுதலாக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன என்று நட்டா நேற்று கூறியிருந்தார். 750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யு. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.பி. நட்டா தெரிவித்திருந்தார். கட்டுமான பணிகள் தொடங்கப்படாத நிலையில் 95 சதவீதம் பணிகள் முடிந்ததாக கூறும் ஜே.பி.நட்டாவுக்கு தற்போது கண்டனம் வலுத்து வருகிறது. …

The post சாலை, சுற்றுச்சுவரை தவிர எந்த கட்டுமான பணிகளும் தொடங்கப்படவில்லை!: மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்தனவா?.. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேச்சால் சர்ச்சை..!! appeared first on Dinakaran.

Related Stories: