மூணாறு, மே 29: கேரளா மாநிலம் மூணாறிலும், சுற்றுப் பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளை குறி வைத்து நடக்கும் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மூணாறு அருகே உள்ள சுற்றுலா தலமான ரோஸ் கார்டன் சாலையில் உள்ள சாலையோர கடைகளில் சமீபகாலமாக திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு முறை திருட்டுக்கள் நடந்துள்ளதாகவும் ரூ.50,000க்கு மேல் விலையுள்ள பொருட்கள் திருடு போனதாகவும் சாலையோர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மூணாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் அப்பகுதிக்கு திருட வந்த திருடனின் முகம் அங்குள்ள ஒரு கடையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் விரைந்து திருடனை பிடித்து திருட்டு சம்பவங்களுக்கு காவல்துறையினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சாலையோர கடைகளில் தொடர் திருட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.