தர்மபுரி, ஜூலை 20: பாப்பிரெட்டிபட்டி அருகே மாநில நெடுஞ்சாலைகளில் சாலை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் சாலையோரங்களில் மண் அணைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி உப கோட்டத்திற்கு உட்பட்ட கிராமப்புற சாலைகளில், தார்சாலையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, கோட்ட பொறியாளர் நாகராஜூ அறிவுறுத்தலின் பேரில், பாப்பிரெட்டிபட்டி உபகோட்டத்திற்கு உட்பட்ட தார்சாலையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் மண் அணைத்து சமன் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. எதிர்வரும் மழை காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்காதவாறு, கல்வெட்டு மற்றும் சிறுபாலப் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை பாப்பிரெட்டிப்பட்டி உப கோட்டப் பொறியாளர்கள் பார்வையிட்டனர்.
The post சாலையோரங்களில் மண் அணைத்து சீரமைப்பு appeared first on Dinakaran.
